அரவிந்த் கெஜ்ரிவாலைப் பிணையில் விடுவிக்க இடைக்காலத் தடை

அரவிந்த் கெஜ்ரிவாலைப் பிணையில் விடுவிக்க இடைக்காலத் தடை

1 mins read
e7427b14-4e10-4ed2-827f-f325a38288b7
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

 புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் புதுடெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 20) இரவு பிணை வழங்கியது.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 21) விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கெஜ்ரிவாலைப் பிணையில் விடுவிக்க டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும்வரை சிறையிலிருந்து வெளியே வர இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் பிணையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அரவிந்த் கேஜ்ரிவால்பிணைதடை