திருச்செந்தூர் கடற்கரையில் கடல் ஆரத்தி: பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் ஆரத்தி: பல்லாயிரக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

1 mins read
ffe93b62-e5bf-4b0a-a558-3091189907f9
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் பௌர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. - படம்: ஊடகம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் ஆனி மாத குபேர பௌர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடற்கரை மணலில் அமர்ந்து விளக்கேற்றி கடல் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

இந்த பௌர்ணமி தினத்தில் வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுவதால், குபேர பௌர்ணமியை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கடை பகுதியில் பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான சமுத்திர அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து சந்தோச மண்டபத்தில் சிறப்பு பூசையுடன் தொடர்ந்து கடல் ஆரத்தியும் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்