மும்பை: புனேயில் கடந்த சனிக்கிழமை இரவு, 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கொல்லப்பட்ட விபத்தில், ஸ்போர்ட் கார் ஒன்றை ஓட்டி வந்தவர், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு, தப்பியோடி விட்டார். இப்போது மகாராஷ்டிரா காவல்துறையினர் அந்த 39 வயது ஆடவரைக் கைதுசெய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவர் புனேயைச் சேர்ந்த மயூர் சஜிப்ராவ் மோகித் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திலிப் மொகித் என்பவரின் உறவினர் என்று தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் கொல்லப்பட்ட அந்த ஆடவர் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவன் சுனில் பலேராவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை புனேயில் இருந்து நாஷிக் செல்லும் சாலையில், எக்லாஹ்ரே என்னும் சிற்றூருக்கு அருகே இரவு 9.25 மணிக்கு அந்த விபத்து நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

