பிரஜ்வல் ரேவண்ணாவின்சகோதரர் சூரஜ் கைது

1 mins read
d8c14ceb-73b0-4bbe-80ea-558fefbb48c9
பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஹாசன்: பிரஜ்வல் ரேவண்ணாவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்எல்ஏவான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்.டி.ரேவண்ணாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா.

இவர்களில் பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். சூரஜ் ரேவண்ணா தற்போது எம்எல்சியாக உள்ளார்.

முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாக புகார் எழுந்ததால் அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் பதுங்கி இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவை கடந்த மே மாதம் சிறப்புப் புலனாய்வுக் குழு காவல்துறை கைது செய்தது.

அவரை காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா கொல்லங்கி கிராமத்தைச் சேர்ந்த ஜனதாதளத்தின் தொண்டரான சேத்தன், சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. மீது புகார் அளித்துள்ளார்.

சூரஜ் ரேவண்ணா தன்னை ஓரின சேர்க்கைக்கு அழைப்பதாகவும், இதுபற்றி வெளியே தெரிவிக்காமல் இருக்க ரூ.5 கோடி கொடுப்பதாகவும் அந்தப் புகாரில் சேத்தன் கூறியுள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணாவை காவல்துறை கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்
ரேவண்ணாநாடாளுமன்ற உறுப்பினர்பாலியல் வன்கொடுமை

தொடர்புடைய செய்திகள்