பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சனிக்கிழமை (மே 22) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவரும் ஒரு சில கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
பவித்ரா கவுடாவுக்கு, தர்ஷனின் ரசிகரான சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி, 33, என்பவர் அடிக்கடி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.தனது அந்தரங்க உறுப்பையும் புகைப்படம் எடுத்து அவர் அனுப்பியுள்ளார். இந்தச் சச்சரவில் ரேணுகா சாமி கொல்லப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தர்ஷன், பவித்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இம்மாதம் 11ஆம் தேதி தர்ஷன் உட்பட 13 பேரையும் பெங்களூரு நீதிமன்றத்தில் காவல்துறை முன்னிலைப்படுத்தியது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியைக் கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட மொத்தம் 17 பேர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

