ஹைதராபாத்: தெலுங்கானாவின் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.
அவ்வகையில், இப்போது பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் குமார், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அம்மாநிலத்தின் முதல்வரும் தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் சஞ்சய் குமார் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
முன்னதாக பி.ஆர்.எஸ். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாஸ் ரெட்டி, கடியம் ஸ்ரீஹரி, தனம் நாகேந்தர், டெல்லம் வெங்கட் ராவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்களைத் தவிர ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி ஆர்.கட்வால் உள்பட பல பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்களும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர்.