திருவனந்தபுரம்: கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது முதல் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. தனியார் பயிற்சிப் பள்ளிகளை விட 40 விழுக்காடு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தகவல் தெரிவித்துள்ளது. நியாயமான கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் மாநில திட்டமான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் ஓட்டுநர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்தப் பள்ளிகள் மூலம் தரப்படுத்தப்பட்ட பயிற்சி நடைமுறைகளை உறுதி செய்வதிலும் கேரள அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரு சக்கரம், நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற ரூ.11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
. இரு சக்கர வாகனம் என்றால் 3,500 ரூபாயும் 4 சக்கர வாகனம் என்றால் 9,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

