இந்தியாவில் சமத்துவமின்மை; மேல் சாதிகளிடம் 90% செல்வம்

இந்தியாவில் சமத்துவமின்மை; மேல் சாதிகளிடம் 90% செல்வம்

1 mins read
a9a3c1fe-b6ad-4235-95fe-02f1214c95a3
இந்தியாவில் எண்பது விழுக்காடு செல்வம் மேல்சாதிக்காரர்களிடம் குவிந்துள்ளது என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் மக்களிடையே சமத்துவமின்மை கூடியுள்ளது என்று ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

உலக சமத்துவமின்மை சோதனைக் கூடம் என்ற அமைப்பு அந்த அறிக்கையை வெளியிட்டது.

‘இந்தியாவில் வரி மற்றும் மறுபகிர்வு செல்வம்’ என்ற தலைப்பில் உள்ள அறிக்கையில் நாட்டின் பெரும் செல்வந்தர்களின் செல்வம், மேல் சாதி மக்களிடம் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவின் பெரும் செல்வந்தர்களின் செல்வத்தில் 88.4 விழுக்காடு, மேல் சாதிக்காரர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனால் இதற்கு மாறாக இந்தியாவின் ஊழியர் அணியில் பட்டியல் இனத்தவரும் பட்டியல் பழங்குடியினரும் குறிப்பிட்ட பங்கை வகிக்கின்றனர். இதனால் இவர்களின் பிரதிநிதித்துவம் நிறுவன உரிமையாளர்களில் குறைவாக உள்ளது.

இந்த முரண்பாடு செல்வந்தர்களிடம் மட்டுமல்ல. 2018-19ஆம் ஆண்டிற்கான அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு (AIDIS), தேசிய செல்வத்தில் கிட்டத்தட்ட 55 விழுக்காட்டை உயர் சாதியினர் வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

இந்தச் செல்வச் செழிப்பு, இந்தியாவின் சாதி அமைப்பில் வேரூன்றியிருக்கும் தொடர்ச்சியான பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்