பாஜக மூத்த தலைவர் அத்வானி வீடு திரும்பினார்

பாஜக மூத்த தலைவர் அத்வானி வீடு திரும்பினார்

1 mins read
af8d077d-aeaa-4bc4-ad52-31374c69d1a8
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அத்வானி குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, 96, உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி, வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். தற்போது அத்வானியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்ததால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்