நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த பெண் எம்.பி.

நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த பெண் எம்.பி.

1 mins read
d7baf8e9-6ce2-4b05-bb80-8631dd68e3cb
காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. புலோ தேவி நேதம், 52. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி. திடீரென மயங்கி விழுந்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அதிபர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம், திடீரென மயங்கி கீழே சரிந்தார்.

அதைக் கண்ட அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடனடியாக அவருக்கு உதவி செய்யும்படி அருகில் இருந்த எம்பிக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புலோ தேவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவத்தால் மாநிலங்களவையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

52 வயதாகும் புலோ தேவி நேதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்மயக்கம்எம்.பி.