டெல்லியைத் தொடர்ந்து குஜராத்திலும் இடிந்து விழுந்த விமான நிலையக் கூரை

டெல்லியைத் தொடர்ந்து குஜராத்திலும் இடிந்து விழுந்த விமான நிலையக் கூரை

1 mins read
c7ba5da2-7d3c-460e-99ab-be842351f433
ராஜ்கோட் விமான நிலைய வெளிப்புற மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. - படம்: பிடிஐ
Google News Preferred Icon

அகமதாபாத்: வடமாநிலங்களின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடர் கனமழை காரணமாக ஜூன் 28ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் மரணமடைந்த நிலையில், இப்போது, குஜராத் மாநிலம், ராஜ்கோட் விமானநிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக வாகனங்கள் நிற்கும் இடத்தில் உள்ள கூரை கனமழையால் இடிந்து விழுந்திருப்பது பேதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

கனமழையால் கூரைமீது தேங்கியிருந்த நீரை அகற்றும் பணியை மேற்கொண்டிருந்தபோது இவ்விபத்து நேர்ந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு வட்டாரங்களைச் சுட்டி ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு சனிக்கிழமை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்