ஹைதராபாத்: மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் திங்கட்கிழமை (ஜூலை 1) காலை 6 மணிக்கு ரூ.4,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார்.
இனி, ஒவ்வொரு மாதமும் உங்கள் வீட்டு வாசல் தேடி இந்த ஓய்வூதியத் தொகை வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 65,18,496 பேருக்கு ரூ.4,408 கோடி மதிப்பிலான ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.3,000 ஓய்வூதியத் தொகையுடன் ரூ.1,000 உயர்த்தப்பட்டு இப்போது ரூ.4,000ஆக வழங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியமும் ரூ.3,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.