ஹரியானா: கர்னாலில் தடம் புரண்ட சரக்கு ரயில்

1 mins read
a5589a73-c42c-4f5a-8fdc-9c2be3038faf
சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து விளக்கமளிக்கும் காவல் ஆய்வாளர் தினேஷ். - படம்: ஊடகம்

கர்னால்: ஹரியானாவில் உள்ள கர்னால் மாவட்டத்தில் உள்ள தாராவாரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் எட்டுப் பெட்டிகள் செவ்வாய்க்கிழமை தடம் புரண்டதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்தின.

“டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4:40 மணியளவில், கர்னாலில் உள்ள தாராவாரி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு சக்கரங்கள் கழன்றுவிட்டன. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்று கர்னால் காவல் ஆய்வாளர் தினேஷ் தெரிவித்தார்.

“டெல்லி-அம்பாலா ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த மாதத் தொடக்கத்தில் ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்திலும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

குறிப்புச் சொற்கள்