பாட்னா: பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மொத்தம் 12 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன. இதையடுத்து, 14 பொறியாளர்களைப் பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், புதிய பாலங்களைப் புனரமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளாகக் கருதப்படும் ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமானச் செலவுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியாளர்களின் அலட்சியம், முறையான கண்காணிப்பு இல்லாததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

