தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒன்பது பேர் உயிரிழப்பு

1 mins read
a308e3ac-3d90-4a06-afd0-2951e5d80178
படம் - பிக்சாபே

பாட்னா: பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஜெகனாபாத், மாதேபுரா, கிழக்கு சம்பாரண், ரோஹ்தாஸ், சரண், சுபால் மாவட்டங்களில் மின்னல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஜெகனாபாத் மாவட்டத்தில் மூவரும் மாதேபுராவில் இருவரும் கிழக்கு சம்பாரண், ரோஹ்தாஸ், சரண், சுபால் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி நடக்கவேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டார்

குறிப்புச் சொற்கள்
மின்னல்உயிரிழப்புபாட்னா