அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட போலே பாபா சாமியாரின் சொற்பொழிவைக் காண 250,000 பேர் திரண்டிருந்தனர். அவர்களில் 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தச்சூழலில், “இந்தச் சம்பவத்துக்கு போலே பாபாதான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்,” என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஹாத்ரஸில் ஜூலை 2ஆம் தேதி நடந்த துயரச் சம்பவத்தை அடுத்து தலைமறைவாகி உள்ள போலே பாபா, அந்தச் சம்பவம் தனது மனதை வலிக்க வைப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
“நடந்த சம்பவத்துக்கு அவர்தான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவர் மாநில அரசிடம் இதனைத் தெரிவித்தாக வேண்டும். அதோடு தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் உறுதியானால் அவர் சிறையில் அடைக்கப்படுவார்,” என சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

