தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு வாரங்களுக்குள் பதிலளிக்க பதஞ்சலிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read
e5594fe0-00b9-4ba4-b865-abcfbb37fdfe
தவறான விளம்பரச் சித்திரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் முன்னிலையான யோகா குரு ராம்தேவ். - படம்: பிடிஐ

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில மருந்து உரிம ஆணையத்தால் தயாரிப்புத் தடை விதிக்கப்பட்ட 14 பொருள்களின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.

நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் பதஞ்சலி நிறுவனம் தனது 5,606 கிளைகளிலிருந்தும் அந்தப் பொருள்களைத் திரும்பப் பெற அறிவுறுத்தியதாகத் தெரிவித்துள்ளது.

அதே போல அந்தப் பொருள்களுக்கான விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்தவும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டதாக பதஞ்சலி தெரிவித்தது.

இந்த வழக்கில் 14 பொருள்களின் விளம்பரத்தைத் திரும்பப் பெற பதஞ்சலி முன்வைத்த கோரிக்கை சமூக ஊடங்களால் ஏற்கப்பட்டதா, விளம்பரங்கள் திரும்ப பெறப்பட்டனவா என்பது குறித்த விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அமர்வு கேட்டுக்கொண்டு, மேலதிக விசாரணையை ஜூலை 30க்கு ஒத்திவைத்தது.

ஆயுர்வேத பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி மீது இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தொடர்ந்த தவறான விளம்பரச் சித்திரிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

முன்னதாக உத்தராகண்ட் மாநில மருந்துகள் உரிமம் வழங்கும் ஆணையம் பதஞ்சலி மற்றும் திவ்யா மருந்தக நிறுவனங்களின் 14 பொருள்களுக்கு உடனடியாகத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்