புதுடெல்லி: மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும், தங்களின் முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125ன் கீழ், முஸ்லிம் பெண்களும் இவ்வாறு பராமரிப்புத் தொகை கோரலாம் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தச் சமயத்தையும் பொருட்படுத்தாமல் அனைத்துப் பெண்களுக்கும் இச்சட்டப்பிரிவு பொருந்தும் என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.