ஐஸ்வால்: மிசோரமில் உள்ள ஐஸ்வால் நகரில் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.32.54 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்பில் ஒரு பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மிசோரம் காவலர்கள் கூறினர்.
106 பொட்டலங்களில் 115.55 கிலோ மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் (யாபா மாத்திரைகள் அல்லது பார்ட்டி மாத்திரைகள் என்றும் சொல்கின்றனர்) இருந்ததாக அவர்கள் கூறினர்.
மிசோரமில் இருந்து பெரிய அளவில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கவ்சாலின் லுங்வார் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பை நகரில் இருந்து ஐஸ்வாலுக்குச் சென்ற ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் சென்ற இரு நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து 115.55 கிலோ எடைகொண்ட மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள் அடங்கிய 106 பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.