புதிய வெளியுறவுச் செயலாளராக மிஸ்ரி

புதிய வெளியுறவுச் செயலாளராக மிஸ்ரி

1 mins read
15533b9c-ba7f-4d4c-99b3-4eca38b5b5c3
வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக, ஜூலை 15ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட திரு விக்ரம் மிஸ்ரிக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டார். - படம்: ஐஏஎன்ஸ்

புதுடெல்லி: வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்த வினய் குவாத்ரா வரும் ஜூலை 14ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து அந்தப் பதவியில் விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார். எல்லை தொடர்பாக இந்தியா - சீனா பேச்சுவார்த்தையில் இவர் முக்கியப் பங்காற்றினார். புதிய வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள மிஸ்ராவுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்