தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீகாரில் முக்கிய அரசியல் பிரமுகர் படுகொலை

1 mins read
be2b7621-53a7-47e6-a48e-a7be40adf774
தார்பங்கா மாவட்டத்தின் கான்ஷியாம்பூரில் அமைந்துள்ள ஜித்தன் சஹானியின் வீடு. - படம்: இந்திய ஊடகம்

பீகார்: பீகாரின் விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை ஜித்தன் சஹானி பீகார் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்திலுள்ள அவரது பூர்வீக வீட்டில் ஜூலை 16 காலை கொல்லப்பட்டுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரிடையே செல்வாக்கு மிகுந்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான முகேஷ் சஹானியின் தந்தையுமான அவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரசுடன் இணைந்து இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் விகாஷீல் இன்சான் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தார்பங்கா மாவட்டத்திலுள்ள கான்ஷியாம்பூரில் அமைந்துள்ள ஜித்தன் சஹானியின் வீட்டுக்குள் திருட முயன்ற மர்ம நபர்கள் சிலரை சஹானி தடுக்க முற்பட்டதால் அவரைக் கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, 3 பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரின் முக்கிய அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில துணை முதல்வரும் பாஜக தலைவருமான சம்ராட் சௌத்ரி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, உரிய தண்டனை வழங்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்