மும்பை: மும்பை நெடுஞ்சாலையில் பந்தர்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றும் எதிர்த்திசையில் இருந்து வந்த கனரக வாகனமும் செவ்வாய்க்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அந்த விபத்தில், கனரக வாகனம் சாலையில் இருந்து தடம்புரண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 42 பேரில் ஐந்து பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்துக்குள்ளான கனரக வாகனம் மற்றும் பேருந்து ஆகியவற்றில் இருந்து பயணிகள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சில மணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. அந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

