தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்; இந்தியப் பணியாளா் உயிரிழப்பு

1 mins read
890163e6-b269-4dab-93fe-d6c6f0ff15f8
ஓமான் கடல்பகுதியில் மூழ்கிய எண்ணெய் கப்பல். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஓமான் கடல்பகுதியில் எண்ணெய்க் கப்பல் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஜூலை 18ஆம் தேதி தெரிவித்தனா்.

கொமரோஸ் நாட்டைச் சோ்ந்த எண்ணெய்க் கப்பல் ஓமான் நாட்டின் துகம் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் 25 கடல் மைல் தொலைவில் ஜூலை 14ஆம் தேதி மூழ்கியது.

கப்பலில் 13 இந்தியா்கள் மற்றும் 3 இலங்கை நாட்டவா் பணியில் இருந்த நிலையில், அவா்களில் 8 இந்தியா்களும் இலங்கையைச் சோ்ந்த ஒருவரும் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டனா்.

இந்நிலையில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவின் ஐஎன்எஸ் டெக் போா்க்கப்பலால் மீட்கப்பட்ட 8 இந்தியா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்த இந்தியப் பணியாளா் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஓமான் நாட்டின் கடற்படையினா் மீட்பு நடவடிக்கையைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்,” எனக் குறிப்பிட்டிருந்தாா்.

குறிப்புச் சொற்கள்