தொழிலாளிக்குக் கைப்பேசி வாங்க `கியூஆர் குறியீடு’ மூலம் நிதி திரட்டு

1 mins read
62fe8fe1-1e40-4d6a-aab8-1b5a1d8c358f
டி-சட்டையில் கியூஆர் குறியீட்டை அச்சிட்டு, நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நல்ல நோக்கத்திற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டும் (Crowdfunding) நடவடிக்கைகள் பல இடங்களில் நடக்கின்றன.

இந்நிலையில் டெல்லியில் இளையர் ஒருவர் ‘கியூஆர்’ குறியீட்டுடன் கூடிய டி-சட்டை அணிந்து நிதி திரட்டிய சம்பவம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

டெல்லியை சேர்ந்த பூஜா சன்வால் என்ற பெண், கன்னாட் பிளேஸ் பகுதியில் ரோகித் சலூஜா என்ற இளையர் அணிந்திருந்த ‘கியூஆர்’ டி-சட்டையைப் பார்த்தார்.

அதில், “உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சோனு என்ற முடிதிருத்தும் தொழிலாளியின் கைப்பேசியை யாரோ திருடிவிட்டனர். இது அவரை மிகவும் வருத்தப்படுத்தியது. யாரிடமும் முரட்டுத்தனமாக பேசாத, அன்பான உள்ளம் கொண்ட அவரது முகத்தில் புன்னகையை வரவழைக்க புதிய கைப்பேசி வாங்கி கொடுக்க நிதி திரட்டுகிறேன்,” எனக் கூறப்பட்டிருந்தது.

பூஜா சன்வாலின் இந்த பதிவு இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 37 பேர் அவருக்கு நிதியுதவி செய்தனர். இந்தப் பதிவை பார்த்த ஒருவர், முடிதிருத்தும் நபரைக் கவனித்து கொள்வதற்காக அவரை மதிக்க வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே ஒரு நிறுவனம் அந்த முடிதிருத்தும் தொழிலாளிக்கு புதிய கைப்பேசியை வழங்கி உள்ளது.

குறிப்புச் சொற்கள்