திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 8 ஆண்டுகளில் 800 யானைகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட 8 ஆண்டுகளில் 845 யானைகள் பலியாகிவிட்டன. இது காலப்போக்கில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் உள்ள 4 மாநில யானைகள் காப்பகங்களில் நடத்திய ஆய்வில் இந்த தரவுகள் கிடைத்தன.
இளவயதுடைய யானைகள், குறிப்பாக 10 வயதுக்குள்பட்டவை, இறப்புக்கான அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன.
இந்த அபாயகரமான விகிதம் தோராயமாக 40 விழுக்காடு.
யானைக் குட்டிகள் இறப்பு அதிகரிப்புக்கு யானைகளைத் தொற்றக்கூடிய ஒரு வகை (EEHV-HD) கிருமியால் பரவும் நோய் என்று கூறப்படுகிறது.
உணவுப் பற்றாக்குறையால் போதுமான அளவு தீவனம் கிடைக்காததும் யானைகள் இறப்புக்கு காரணமாகின்றன.
யானைகள் அதிகளவில் இறப்பதற்கு அதிக வெப்பநிலை, யானை வழித்தட மாற்றங்கள், காலநிலையில் நீர் சமநிலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வுத் தெரிவிக்கிறது.