தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 வங்கிகளுக்கு மட்டுமே பாதிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி

1 mins read
8b1e374e-ec03-4d76-841b-4ded2561219e
இந்திய ரிசர்வ் வங்கி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளம் திடீரென முடங்கியதால் விண்டோஸ் கணினியைப் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். குறிப்பாக, விமானத் துறை, சந்தைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கின.

இந்த நிலையில், விண்டோஸ் பிரச்சினையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு ஏற்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மேலும் தெரிவிக்கையில், “மைக்ரோசாஃப்ட் பிரச்சினையால் இந்தியாவில் 10 வங்கிகளில் மட்டுமே சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“கிரவுட்ஸ்டிரைக் பயன்படுத்தியதால் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் செயலிழப்பில் ஒட்டுமொத்தமாக இந்திய நிதித்துறை பெருமளவில் பாதிக்கப்படவில்லை. விழிப்புடன் இருக்கவும் செயல்பாட்டை உறுதி செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று ரிசர்வ் வங்கி கூறியது.

குறிப்புச் சொற்கள்