தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மாரில் மோசடிக்கு ஆளான 11 இந்தியர்கள் மீட்பு

1 mins read
931850b9-605c-407a-a9ef-0f87b5033eda
மோசடியில் சிக்கிய இந்தியர்களை இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடில்லி: இந்தியாவின் அண்டை நாடான மியன்மாரில் உள்ள மியாவாடி நகரில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று தருவதாகக் கூறி, சட்டவிரோத சூதாட்டம், ஆள்கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் சில கும்பல்கள் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மியன்மார் காவல்துறை அக்கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தது.

இதில், சில இந்தியர்களும் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். மோசடி கும்பலிடம் சிக்கிய 11 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மியன்மார் காவல்துறை கூறியது.

அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மோசடிமியன்மார்ஆள்கடத்தல்