புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தலைவர் மனோஜ் சோனி பதவிக்காலம் முடிவதற்கு முன்பே திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
குடிமைப் பணித் தேர்வுகள் தொடர்பாகவும் தேர்ச்சி பெற்றுப் பணியிலிருப்பவர்கள் தொடர்பாகவும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் பெருகிவரும் நிலையில் இவருடைய விலகல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர் போலிச் சான்று அளித்து படிப்பில் சேர்ந்தது தொடர்பான புகார்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாகவும் போலிச் சான்றிதழ் விவகாரத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் மனோஜ் சோனி விளக்கம் அளித்துள்ளார்.
மனோஜ் சோனியின் பதவி விலகல் கடிதம் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

