தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக வருமான வரி விலக்கை உயர்த்த நடுத்தர மக்கள் கோரிக்கை

2 mins read
2119ef9a-f1a5-4906-97c7-333794df8edc
படம் - பிக்சாபே

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் பதவியேற்றுள்ள சூழலில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய வரவு செலவுத் திட்டத்தில் தங்களது வருமானத்துக்கான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தவேண்டுமென நடுத்தர வகுப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய விகிதத்தில் ரூ.2.5 லட்சமாகவும் புதிய விகிதத்தில் ரூ.3 லட்சமாகவும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உள்ளது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்தவேண்டும் என சாமானிய, நடுத்தர வர்க்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, நிதித் துறை நிபுணர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

“தற்போதைய நிலையில் புதிய விகிதத்தில் ஆறு படிகளாக வரிகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, 2.5 முதல் 5 லட்சம் வரை 5% வரி, ரூ.5 முதல் ரூ.7.5 லட்சம் வரை 10% வரி, ரூ.7.5 முதல் ரூ.10 லட்சம் வரை 15% வரி, ரூ.10 முதல் ரூ.12.5 லட்சம் வரை 20% வரி, ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.

“ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய வரவு செலவுத் திட்டத்தில், வரி விதிப்பு விகிதத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம். வீட்டுக் கடனுக்கான அசல், வட்டித் தொகைக்கான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்.

“மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் 2வது முறையாக பதவியேற்றுள்ளார். ஜூலை 23ஆம் தேதி அவர் 7வது முறையாக வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய உள்ளார்.

“இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக ஆறு முறை மத்திய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்தச் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன,” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
வரிவரவுசெலவுத் திட்டம்வரம்பு