புதுடெல்லி: இந்தியப் பொருளியல் வலுவான நிலையில் உள்ளதாக தலைமைப்பொருளியல் ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
“அந்நிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மைத்துறை சிறப்பான வளர்ச்சி அடையும். தொழில், உற்பத்தித் துறை கூடுதல் வளர்ச்சியை எட்டும்,” எனப் புதுடெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திரு ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.
“அனைத்துலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு அதிகரித்திருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை. பணத்தை முதலீடு செய்கின்றன. தனியார் முதலீடுகள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகரித்து வருகின்றன. விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது,” என்றார் அவர்.

