புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன், ஏழாவது முறையாக இந்தியாவின் வரவு செலவுத் திட்டத்தை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார்.
இதுவரை 5 முழு வரவுசெலவுத் திட்டங்களையும், ஒரு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் அந்நாட்டு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிகத்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 மத்திய வரவுசெலவுத் திட்டங்களைத் தாக்கல் செய்திருந்தார்.