பெங்களூரு: நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டையடுத்து கர்நாடகாவிலும் மேற்கு வங்காளத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 15ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் வியாழக் கிழமை (ஜூலை 22) சட்டசபைத் தொடங்கியதும் முதலில் சட்டசபை, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தலைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யவும் நீட் தேர்வில் கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்மையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்காளத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

