சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை இதுவரை 17 பேரைக் கைது செய்துள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான திருமலையின் உறவினரான பிரதீப், முகிலன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை கைதானவர்களின் கைத்தொலைபேசி எண்களை வைத்து விசாரித்த காவல்துறையினர் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் பிரதீப், முகிலன் ஆகியோர் தற்போது பிடிபட்டுள்ளனர். இவர்களை தவிர மேலும் 50 பேர் காவல்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.