சென்னை: ‘நீட் தேர்வு மற்றும் நிமதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், “நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் வாக்களித்த தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரிய துரோகம் செய்துவிட்டார். அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய திரு முருகன், தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை தருகிறார். அவர் எல்லா நேரங்களிலும் ஒருவித குழப்பத்தில் இருக்கிறார் என்று அவர் கூறினார்.

