புதுடெல்லி: கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்குத் தொடுத்திருந்தன.
இந்த வழக்கில் கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 25) தீர்ப்பு அளித்தது.
மாநிலங்களில் உள்ள கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டி தொகையை வரியாகக் கருத முடியாது. கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. இதில் நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

