எம்.பி. ஆவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்ற வேண்டும்: ராகவ் சட்டா வலியுறுத்தல்

எம்.பி. ஆவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்ற வேண்டும்: ராகவ் சட்டா வலியுறுத்தல்

1 mins read
6da8c997-5773-41e9-b890-f807f032c3d9
ராகவ் சட்டா. - கோப்புப் படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினருக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சட்டா, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா, அவையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி பேசும்போது, “நமது நாடு இளமையான நாடுகளில் ஒன்று. வயதான அரசியல்வாதிகளைக் கொண்டுள்ள இளம் நாடாக நாம் இருக்கிறோம். மாறாக, இளம் அரசியல்வாதிகளைக் கொண்ட இளம் நாடாக நாம் இருக்க வேண்டும். இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடுவதற்கு ஏற்ப நாம் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, இந்திய எம்.பி.க்களுக்கான குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைக்குமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்,” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் மக்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 25 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்