ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்எல்ஏக்கள் தற்காலிக நீக்கம்

1 mins read
8756d22a-9dcd-48aa-ac47-d228a321627f
ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பாஜகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. - படம்: இந்திய ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் வியாழக்கிழமை காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என குரல்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஆனால், தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

புதன்கிழமை இரவு பாஜக எம்எல்ஏக்கள் சிலர் சட்டசபையின் வரவேற்புக் கூடத்தில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்