தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

2 mins read
8e42701a-5fe9-4ec0-ba90-be897097935f
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: இணையம்

வாஷிங்டன்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 195 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை மீட்பதே முக்கியம் என்றும், மறுவாழ்வு விரைவில் தொடங்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, சீனா மற்றும் மாலத்தீவுகளுக்குப் பிறகு, கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ள நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்று வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தச் சோகமான நிகழ்வில் இறந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். பேரிடரில் சிக்கலான மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். மக்களைத் தொடர்ந்து பாதுகாப்போம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமது எண்ணங்களில் இந்தியா உள்ளது,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், கேரள நிலச்சரிவின் துயரமான விளைவுகள் குறித்து இந்திய அதிபர் திரௌபதி முர்மு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரங்கல் செய்தியை அனுப்பினார்.

அதில், “கேரள நிலச்சரிவில் சிக்கி இறந்தோருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.

சீனா வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “இந்திய மாநிலமான கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த செய்தியைப் பார்த்தோம். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்