லடாக்: லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி, மலைச்சரிவில் மணல் அள்ளும் பணி நடைபெற்றபோது மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் 12 பேர் காயமடைந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், மண் அள்ளும் எந்திரத்தின் ஓட்டுநரும் அடங்குவார்.
வீட்டின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து காயங்களுடன் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கபடி நல்லாவில் அதிகாலை 3:30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து மலைச்சரிவில் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் காவல்துறையினர், ராணுவ வீரர்களுடன் உள்ளூர்த் தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.