‘இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளியேறுவது நாட்டின் பொருளியலை பாதிக்கும்’

1 mins read
31d2a433-8abf-457f-bd16-e3248028fc37
படம்: - ஊடகம்

புதுடெல்லி: இந்திய மக்கள் தங்கள் குடியுரிமையைக் கைவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுவது பொருளியலைப் பெரிதும் பாதிக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்து மூலமாக அளித்த பதில் ஒன்றில், 2023ம் ஆண்டில் 2.16 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்களது குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘வணிக ஆளுமை மிக்கவர்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டு சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற இடங்களுக்கு அதிக அளவில் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

“குடியுரிமையைத் துறந்து செல்லும் இந்தியர்களில் பலர் மிகவும் திறமையானவர்கள், படித்தவர்கள். உள்நாட்டில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவும்போது அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது நமது பொருளியலில் கடுமையான பாதிப்பை உண்டாக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்