கிரிக்கெட் சூதாட்டக் கும்பல் கைது: ரூ. 2.24 கோடி பறிமுதல்

1 mins read
193866e4-9267-40c0-96a7-059b712b3467
பிடிபட்ட கும்பலிடம் இருந்து கைப்பேசிகளும் மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டன. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் விஹார் பகுதியில் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலின் தலைவன் அங்கித் கோயல், 35, கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை சேர்ந்த மேலும் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ. 2.24 கோடி ரொக்கப் பணம், 18 கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்