புனேயில் 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேருக்கு ஜிகா கிருமி பாதிப்பு

1 mins read
93420760-46c6-476b-afbe-582058a6aa4c
படம்: - ஊடகம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த 2 மாதங்களில் காய்ச்சலால் ஏராளமான பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவர்களுடைய ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவர்களில் 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் 26 பேர் கர்ப்பிணிகள் ஆவர். புனேயில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி எரண்ட்வானே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது அவருடைய 15 வயது மகளுக்கும் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
புனேகிருமித்தொற்றுகர்ப்பிணி

தொடர்புடைய செய்திகள்