தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இனி குட் மார்னிங் கிடையாது, ஜெய் ஹிந்த் மட்டுமே: ஹரியானா பள்ளிகள்

1 mins read
fd018b9e-71e9-455a-8b8a-b4c2e0c106d0
பள்ளிகளுக்கு வருகிறது மாற்றம். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், ஹரியானா மாநில பள்ளிகளில் தற்போதே அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன.

மாநில பள்ளிக் கல்வித் துறை, அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், இனி மாணவர்கள் காலையில் ஆசிரியர்களைப் பார்த்ததும் ‘குட் மார்னிங்’, எனவோ மாலையில் ‘குட் ஈவ்னிங்’ எனவோ சொல்லக் கூடாது என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் எப்போதும் ‘ஜெய் ஹிந்த்’ மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

மாணவர்களிடையே நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு முறையும் ஜெய் ஹிந்த் சொல்லும்போது மக்களிடையே உத்வேகம் பிறக்கும் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்