புதுச்சேரி புதிய டிஜிபி ஷாலினி சிங் பதவியேற்பு: ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி புதிய டிஜிபி ஷாலினி சிங் பதவியேற்பு: ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

1 mins read
072f8565-d492-459e-b9e0-8c7c3c3440fa
ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு புதுச்சேரி வந்த ஷாலினி சிங்,‌ திங்கட்கிழமை காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார் - படம்: தி இந்து

புதுச்சேரி: புதுச்சேரி புதிய டிஜிபி-யாக ஷாலினி சிங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) பதவியேற்றார்.

புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி-யாக இருந்த ஸ்ரீனிவாஸ் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு புதுச்சேரி வந்த அவர்,‌ திங்கட்கிழமை காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக காவல்துறை தலைமையக அலுவலக வளாகத்தில் ஷாலினி சிங்கிற்கு, அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

டிஜிபி-யாக பொறுப்பேற்ற ஷாலினி சிங்க், ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனையும் சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

குறிப்புச் சொற்கள்