யுபிஎஸ்சி தேர்வு முறைகேடு; பூஜா கேத்கரைகைது செய்ய இடைக்கால தடை

1 mins read
23d71679-71fb-4d92-af92-e80f5dae353d
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கரின் முன்பிணை மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து அவர் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், அந்த மனுவை திங்கட்கிழமை விசாரித்தார். அப்போது பூஜா கேத்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 21ஆம் தேதி நடக்கவுள்ளது என்றும் அதுவரை அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதி சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.

மேலும் பூஜா கேத்கரை ஏன் காவலில் எடுக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் அளிக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்