தொழில்நுட்ப கோளாறு; புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிய விமானம்

1 mins read
ceaf3f2f-54ac-42cd-8626-1646a9fdfbb2
படம்: - இந்திய ஊடகம்

மும்பை: வானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் அவசரமாக அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அந்த வகையில், லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஒன்று மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 354 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த விமானி, உடனடியாக, மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

உடனே, விமானம் லண்டனுக்குச் செல்லாமல் மீண்டும் மும்பைக்குத் திரும்பி விட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்