அடல்சேது பாலத்தில் விரிசல்; ஒப்பந்தக்காரருக்கு ரூ.1 கோடி அபராதம்

அடல்சேது பாலத்தில் விரிசல்; ஒப்பந்தக்காரருக்கு ரூ.1 கோடி அபராதம்

ஊடகம்

15 Aug 2024 - 9:38 pm

1 mins read

மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையையும் அதற்கு அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட பாலம் ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது. 2024ஆம் ஆண்டு திறப்பு விழா கண்ட இந்த அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் பாலத்தில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று மகராஷ்டிர அரசு தெரிவித்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டதாகவும் இதற்காக பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்