யாசகம் கேட்டவர் கரும்பால் அடித்து கொலை

யாசகம் கேட்டவர் கரும்பால் அடித்து கொலை

1 mins read
87ceef5c-1f76-46f2-8e16-29629c813dd3
உயிரிழந்த வெள்ளிமலை. - படம்: ஊடகம்

புதுச்சேரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் வெள்ளிமலை (65). இவர் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்களில் கருப்பசாமி வேடமணிந்து யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் கோவில் தேர் திருவிழாவில் கருப்பசாமி வேடமணிந்து வெள்ளிமலை யாசகம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அவர் தட்டில் இருந்த பணத்தை எடுத்தார். பணத்தை வெள்ளிமலை தர மறுக்கவே, ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் உள்ள கடையில் இருந்த கரும்பை எடுத்து வெள்ளி மலையை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வெள்ளிமலை ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது திருவிழாவில் இருந்த வெள்ளிமலையின் உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்