தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்துமீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி

1 mins read
e8c9100b-4c08-4bd3-8ff7-4ee8ceafb406
விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்தனர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

புலந்த்ஷாஹர்: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பேருந்துமீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக சேலம்பூர் பகுதியில் புடான்-மீரட் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி எதிரில் வந்த பேருந்துமீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்து குறித்து அறிந்ததாகவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட நீதிபதி சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துஉயிரிழப்புமும்பை