நீதிமன்றக் காணொளி ஒன்று அண்மையில் இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த ஒரு நிமிட 26 விநாடிக் காணொளியில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண் ஏழு முறை திருமணம் செய்துகொண்டது குறித்துப் பேசப்படுகிறது.
ஆறு கணவன்மார்களிடமிருந்து அந்தப் பெண் பராமரிப்புத் தொகை கோரிப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது நீதிமன்றத்திற்கு வந்துள்ள வழக்கைப் பெண்ணின் ஏழாவது கணவன் தொடுத்துள்ளார்.
மணந்துகொண்ட ஒவ்வொரு கணவனுடனும் அந்தப் பெண் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலம் வரை இருந்த பின்னர், ‘498A’ பராமரிப்பு வழக்குகளை அந்தக் கணவன்மார்கள் மீது தொடுத்துள்ளார் அவர்.
“சட்டத்தோடு விளையாடுகிறீர்கள்,” என்று கூறினார் நீதிபதி.
காணொளி முடியும்போது ஒவ்வொரு கணவனைப்பற்றிய முழு விவரங்கள் திரட்டப்பட வேண்டும் என்று நீதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவும் இட்டார்.
இதுவரை 329,000க்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்ட இந்தப் பதிவு குறித்து இணையவாசிகள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பெண்ணின் பெயரை வெளியிட வேண்டும் என்று பதிவிட்ட ஒருவர், எட்டாவது, ஒன்பதாவது என அடுத்தடுத்த கணவன்மார்களைக் காப்பாற்ற அது வகைசெய்யும் என்றார்.